குட்கா ஊழல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை அவசியம் என உயர்நீதிமன்றம் கருத்து

தி.மு.க. எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தாக்கல் செய்த மனுவில் வருமானவரித்துறை சோதனை அறிக்கையில் குட்கா பான்மசாலா ஊழல் விவகாரத்தில் அமைச்சர், உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் ஆனால் தமிழக அரசு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

குட்கா மற்றும் பான்மசாலா ஊழல் வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சி.பி.ஐ. அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடைபெற்று வருவதால் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உயர் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்பதால் அதுகுறித்து விசாரிக்காமல் இருக்க முடியாது என்று தெரிவித்தனர்.

இந்த வழக்கில் சி.பி.ஐ. போன்ற தன்னிச்சையான அமைப்பு விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும் கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசும் சி.பி.ஐ.யும் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

வழக்கு விசாரணையும் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன