குடியிருப்புப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் – சென்னை காவல்துறை ஆணையர்

குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் பெரிதும் உதவியாக இருப்பதால் குடியிருப்புப் பகுதியில் அவற்றைப் பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை சவுகார் பேட்டை என்எஸ்சி போஸ் சாலைப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள 52 அதி நவீன கண்காணிப்பு கேமராக்களை இயக்குவதற்கான கட்டுப்பாட்டு அறைப் பணிகளை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன், பொதுமக்கள் பெருமளவில் கூடும் பகுதியாக இருப்பதால், என்எஸ்சி போஸ் சாலையில் மட்டும் 52 (Face Dedector) ஃபேஸ் டிடக்டர் கண்காணிப்பு தொழில் நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக கூறினார்.

குற்றவாளிகளைப் பிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் பெருமளவு உதவியாக இருப்பதால், குடியிருப்புப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

காவல் நிலையங்களில் செயல்படாமல் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன