குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து பாஜக ஆட்சிமன்றக் குழு

குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து முடிவு செய்ய பாஜக ஆட்சிமன்றக் குழு இன்று கூடுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், குடியரசு துணைத்தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறுகிறது. இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டு, ஆதரவும் திரட்டி வருகிறார். குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். ஆனால், ஆளும் பா.ஜ.க. சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், பாஜகவின் ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் வேட்பாளர் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!