குடியரசுத் தலைவர் தேர்தலில் 99% வாக்குகள் பதிவு

குடியரசுத் தலைவர் தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மீராகுமாரும் போட்டியிட்டனர்.

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திலும், நாடு முழுவதும் சட்டப்பேரவைகளிலும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்த தேர்தலில், 99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதையடுத்து, நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!