குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு – பிரதமர் மோடி வாக்களிப்பு

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்துள்ளார்.

சரியாக காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் 62-ல் 6-வது மேசையில் உள்ள வாக்குப்பெட்டியில் பிரதமர் மோடி தமது வாக்கினை செலுத்தியுள்ளார். தொடர்ந்து மத்திய அமைச்சர்களும், எம்.பிக்களும் வாக்களித்து வருகின்றனர். பாஜக தலைவர் அமித்ஷாவும் நாடாளுமன்ற வளாகத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்களும், வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் உள்ள சட்டப்பேரவையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன