குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார் நிலை – கருணாநிதி வருவரா என எதிர்பார்ப்பு

குடியரசுத் தலைவர் தேர்தலில், தமிழக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள், சட்டப்பேரவையில் தயார் நிலையில் உள்ளன.

குடியரசுத் தலைவர் தேர்தலில், பா.ஜ.க. சார்பில் ராம்நாத் கோவிந்த்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீராகுமாரும் களத்தில் உள்ளனர். தமிழகத்தைப் பொருத்தவரை, அ.தி.மு.க.வின் இரு அணிகளும் ராம்நாத் கோவிந்தையும், தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் மீரா குமாரையும் ஆதரிப்பதாக அறிவித்துள்ளன. தமிழக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வசதியாக, சட்டப்பேரவையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

ஆர்.கே. நகர் தொகுதியைத் தவிர, 233 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க உள்ளனர். எம்பிக்களை பொருத்தவரை பா.ம.க. எம்.பி. அன்புமணி தேர்தலை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி, குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மருத்துவர்கள் அறிவுரைக்கேற்ப சட்டப்பேரவைக்கு அவர் வருவது முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, சட்டப்பேரவை வளாகத்தின் 10-வது நுழைவாயிலில் வீல்சேர் செல்ல ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!