குடியரசுத் தலைவர் தேர்தலில் தோல்வி பற்றி கவலையில்லை -சோனியா காந்தி

நாட்டை வகுப்புவாதம் மூலம் பிளவுபடுத்த நினைக்கும் குறுகிய மனங்களுக்கு எதிரான யுத்தமாக குடியரசுத் தலைவர் தேர்தல் மாறியிருக்கிறது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். ஆனால், பெரும்பான்மை வாக்குகள் தங்களுக்கு எதிராக இருக்கலாம் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீராகுமார் மற்றும் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் டெல்லியில் நேற்று 18 கட்சிகளின் எம்பிக்களை சந்தித்து ஆதரவு கோரினார்கள். இந்த நிகழ்வில் பேசிய சோனியா காந்தி, எண்ணிக்கை ரீதியாக பா.ஜ.க. பெரும்பான்மை பெற்றிருந்தாலும் இந்த யுத்தத்தை கூடுமான வரை கடுமையான முறையில் நடத்தியே ஆக வேண்டும் என்றார். முன்னாள் பிரதமர்கள் மன்மோகன்சிங், தேவகவுடா உள்பட ஏராளமான தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!