Advertisement

குடிநீர் வினியோகம் செய்யப்படாததைக் கண்டித்து சாலைமறியல்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். மதுராந்தகம் அருகே சூனாம்பேடு காலனியில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் சூனாம்பேடு-புதுச்சேரி சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து அனைவரும் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன