குஜராத் வெள்ள மீட்புப் பணிகளை பார்வையிட்டார் முதலமைச்சர் விஜய் ரூபானி

குஜராத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தங்கி, அங்கு நடைபெறும் மீட்புப் பணிகளை பார்வையிட அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி முடிவு செய்துள்ளார்.

குஜராத்தில் பனஸ்கந்தா, சபர்கந்தா, ஆனந்த், பாடன் (Paatan) மற்றும் வல்சாத் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்திற்கு இதுவரை 145 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் தற்போது வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பனஸ்கந்தா ((Banaskantha)) மாவட்டம் காரியா ((khariya)) கிராமத்தில் நடைபெற்ற மீட்புப் பணிகளை பார்வையிட்ட முதல்வர் விஜய் ரூபானி, மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது பேசிய அவர், குஜராத்தின் வடக்கு பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 5 நாட்கள் முகாமிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உள்ளதாகக் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன