குஜராத் வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 186ஆக உயர்வு

குஜராத் மழைவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 186ஆக உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, ஒடிசா, குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால், பெரும்பாலான ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளதால், பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் பனஸ்கந்தா ((Banaskantha)), பதான் ((Patan)), சபர்கந்தா ((Sabarkantha)) மற்றும் மெஹ்சனா ((Mehsana)) ஆகிய மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மழைவெள்ளத்துக்கு இதுவரை 186 உயிரிழந்துள்ளதாக, மாநில வெள்ள கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தனேரா ((Dhanera)) பகுதியில், மாநில விவசாயப் பொருட்கள் சந்தைக்குழுவுக்கு சொந்தமான காலியிடத்தில் வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரம் டன் உணவு தானியங்களும் வெள்ளத்தில் சேதமடைந்தன. நிவாரணம் மற்றும் மீட்புப்பணிகளை துரிதப்படுத்துமாறு, முதலமைச்சர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன