தேர்தல் ஆணையம் நெருக்கடியில் உள்ளது – காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஹிமாச்சலப் பிரதேச தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

வரும் 16-ஆம் தேதி பிரதமர் மோடி குஜராத்துக்கு சென்று நலத்திட்டங்களை அறிவிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்பதாலேயே தேர்தல் ஆணையம் குஜராத் தேர்தலை அறிவிக்காமல் இருப்பதாக காங்கிரசின் ரண்தீப்சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஹிமாச்சலப் பிரதேசம், குஜராத் இரு மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் வரும் ஜனவரியிலேயே முடிவடையும் நிலையில் தேர்தல் ஆணையம் குஜராத் தேர்தல் அறிவிப்பை வெளியிடாமல் இருப்பது சந்தேகங்களுக்கு வழி வகுத்துள்ளதாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன