கீழ் தளப் படிக்கட்டுகளை, கார் பார்க்கிங் என தவறாக நினைத்த பெண்

சிலியில், படிக்கட்டுக்களைக் கார் பார்க்கிங் நுழைவாயில் என தவறாக நினைத்த பெண் விபத்திலிருந்து தப்பும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சான்டியாகோவில், கடந்த வியாழனன்று, கட்டிடம் ஒன்றில் காருடன் நுழைந்த பெண், கீழ் தளத்தை நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் படிக்கட்டுகளை கவனிக்கவில்லை. அதை கார்களைப் பார்க்கிங் செய்ய அமைக்கப்பட்டிருக்கும் வழி எனக் கருதி, அதனுள் காரை செலுத்தினார். ஆனால், சில படிக்கட்டுகளிலேயே சுதாரித்த பெண், பிரேக்கை அழுத்திப்பிடித்தபடி தவித்தார். அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் அவர் கார் பிரேக்கை காலில் இருந்து எடுக்கும் அதே சமயம் அவரை முன்பக்க கதவு வழியாக வெளியே இழுத்தார்.

பதற்றத்தில் ஹேன்ட் பிரேக்கைப் பயன்படுத்தவும் அவர் மறந்துவிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன