கீழடியில் நான்காம் கட்ட ஆய்வுகள் விரைவில் துவங்கப்படும் -அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்

கீழடி அகழ்வாராய்ச்சிக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியிலேயே நான்காம் கட்ட ஆய்வுகள் விரைவில் துவங்கப்படும் என அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்ற பேரணியை தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், கீழடி நான்காம் கட்ட ஆய்வு பணிக்காக 2 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்ள்ளதாகவும், மத்திய அரசு ஒப்புதல் வழங்கியவுடன் ஆய்வு துவங்கும் என தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன