கிழக்கு சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கால், சிறிய தடுப்பணை நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது

சேலம் மாவட்டம் ஓமலுர் அருகே பத்து நாட்களாக பெய்த மழையால், கிழக்கு சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சிறிய தடுப்பணை நிரம்பி தண்ணீர் ஆர்ப்பரித்து வெளியேறுகிறது. கிழக்கு சரபங்கா உற்பத்தியாகும் பனிக்கரடு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் மழை நீர், சக்கரசெட்டியப்பட்டி குருமச்சிகாடு என்ற பகுதியில் விவசாயிகளின் பங்களிப்புடன் வனத்துறையினர் கட்டியுள்ள தடுப்பணையை நிரப்பி வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளப்பெருக்கால் கரும்பு, மரவள்ளிகிழங்கு உள்ளிட்ட பயிரிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் காமலாபுரம் ஏரியை சென்றடையும். ஏரிக்கு தண்ணீர் வருவதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *