Advertisement

கிழக்கு ஆசிய தலைவர்கள் மாநாட்டில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்கவில்லை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதைத் தவிர்த்துள்ளார். அதிபர் ட்ரம்ப் தனது ஆசிய பயணத்தை முடித்துக்கொண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார்.

விமானத்தில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் தாம் பேசுவதற்காக தயாரித்து வைத்திருந்த செய்தியை, மதிய உணவின்போது தலைவர்களுடன் பகிர்ந்துகொண்டதாகக் கூறினார். இதனிடையே, மணிலாவில் நடைபெறும் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டதை விட ஒன்றரை மணி நேரம் தாமதமாக நடைபெறுவதாக வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆசிய தலைவர்கள் மாநாட்டில் அதிபர் ட்ரம்புக்கு பதிலாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கலந்துகொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன