கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் நக்சல் தடுப்பு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

30க்கும் மேற்பட்ட சிறப்பு அதிரடிப்படை போலீசார், நவீன துப்பாக்கிகளுடன் காவிரி ஆற்றங்கரை பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி, பிலிகுண்டுலு, நாட்றாம்பாளையம், ராசிமணல் போன்ற அடர்ந்த காடுகளில் நடந்து சென்றனர். புதிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தெரிவிக்குமாறு மலைகிராம மக்கள், கால்நடை மேய்ப்போருக்கு அவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன