கிருஷ்ணகிரி, ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் எண்ணேகொள் புதூர் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததால், பள்ளிக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 250 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால் இங்கு தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசியர்கள் மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது. கூடுதல் ஆசிரியர்கள் கேட்டு பலமுறை கோரிக்கை வைத்தும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனக் கூறும் இப்பகுதி மக்கள், இன்று பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தொடக்கக் கல்வி அலுவலர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன