கிணற்றை ஆழப்படுத்தும்போது கூலித்தொழிலாளி பலி

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே கிணற்றை ஆழப்படுத்தும் பணியின்போது, கற்கள் சரிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

காரை கிராமத்தில் துரைசாமி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தூர்வாறும் பணி நடைபெற்று வருகிறது.

கிணற்றில் இருந்து தோண்டப்பட்ட கற்கள் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொழிலாளர்கள் கிணற்றை ஆழப்படுத்திக் கொண்டிருக்கும் போது, மேல்பகுதியில் இருந்த கற்கள் திடிரென சரிந்து கிணற்றுக்குள் விழுந்தன.

இதில், வடிவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த 3 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!