காஷ்மீர் விவகாரத்தில் கருத்துக் கூறும் உரிமை ஓஐசிக்கு இல்லை – இந்தியா

காஷ்மீர் விவகாரத்தில் (OIC) ஓஐசி என்ற சர்வதேச இஸ்லாமியர்களுக்கான அமைப்பு தெரிவித்திருக்கும் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் இஸ்லாமியர்களின் மனித உரிமைகளை இந்தியா மதிப்பதில்லை என்றும், சுயநிர்ணயம் தொடர்பான அவர்களுடைய உணர்வுகள் புறக்கணிக்கப்படுவதாகவும், ஓஐசி அமைப்பு தெரிவித்திருந்தது.

ஓஐசியின் இந்தக் கருத்தை மேற்கோள்காட்டி, ஐநா அமைப்பில் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டி இருந்தது. இந்த விவகாரம் குறித்து ஐநாவில் நடைபெற்ற அமர்வில் பேசிய இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி சுமித் சேத், காஷ்மீர் விவகாரத்தில் கருத்துச் சொல்வதற்கான உரிமை ஓஐசிக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *