காஷ்மீர் தீவிரவாதத்திற்கு நிதியுதவி புகார்- பல்வேறு இடங்களில் சோதனை

தீவிரவாதத்திற்காக நிதி திரட்டிய விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஹூரியத் கூட்டமைப்பின் தலைவர் சையத் அலி கீலானிக்கு நெருக்கமான வழக்கறிஞர் ஒருவர் வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.தேவேந்திர சிங் பெஹல் என்ற அந்த நபரின் வீடு அலுவலகம் தவிர தெஹ்ரீக் இ ஹூரியத் கட்சியின் உறுப்பினர்கள் சிலரது வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதத்தைத் தூண்டுவோரிடமிருந்து நிதி பெற்றதாக சந்தேகம் எழுந்த நிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே அமலாக்கப்பிரிவினர் கீலானியின் மகன் நயீமுக்கு சம்மன் அனுப்பி விசாரணக்கு ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். ஆனால் உடல்நலம் பாதிப்பால் நயீம் ஆஜராக மாட்டார் என்று கீலானி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன