Advertisement
Advertisement

காஷ்மீரில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை

காஷ்மீர் மாநிலம் யூரி வனப்பகுதிக்குள் மறைந்துள்ள தீவிரவாதிகளில் இருவரை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள கல்ஃகை ((Kalgai)) என்ற கிராமத்தின் வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து நேற்றிரவு அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அவர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். தீவிரவாதிகளின் மறைவிடத்தை அறிந்து அவர்களை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர் சரமாரியாக சுட்டனர். இதில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் ஒன்று அல்லது இரண்டு தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், தொடர்ந்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு யூரியில் ராணுவ முகாமை தாக்கியது போலவே, தற்போதும் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ஜம்மு காஷ்மீர் மாநில காவல் டி.ஜி.பி. தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளுடனான சண்டை தொடர்வதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன