காஷ்மீரில் தீவிரவாதிகள் பெரும் நெருக்கடியில் உள்ளனர்: அருண்ஜேட்லி

மத்திய அரசின் நடவடிக்கைகளால் ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதிகள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் தீவிரவாதிகள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்தார். மேலும் வெளிநாட்டு நிதி தொடர்பான தேசிய புலனாய்வு நிறுவனத்தின் நடவடிக்கைகள் காஷ்மீரில் சமூக விரோத நடவடிக்கைளுக்கு தடையாகியிருப்பதாகவும் அருண்ஜேட்லி கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில் காஷ்மீரில் மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதலை நடத்த எந்தத் தீவிரவாதியும் கனவு காண முடியாது என்றும் அவர் தெரிவித்தார். காஷ்மீரில் தீவிரவாதிகள் தப்புவதற்கு காரணமான, கல்வீசும் கும்பல் பெருமளவில் குறைந்திருப்பதாகவும் அருண்ஜேட்லி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன