காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர் உள்ளிட்ட இருவர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உள்பட இருவர் உயிரிழந்தனர். காஷ்மீரின் சோபியான் மாவட்டம் ஸைனாபோரா அருகே அவ்னீரா கிராமத்தில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜா உள்பட இருவர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வீரமரணம் அடைந்த இளையராஜா சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கண்டானி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். பெரியசாமி, மீனாட்சி தம்பதியரின் மகனான இளையராஜாவுக்கு செல்வி என்ற மனைவி உள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன