காவி சால்வையை பறித்த தாஜ்மஹால் பாதுகாப்பு அதிகாரிகள்

தாஜ்மஹாலுக்குச் சென்ற மாடல் அழகிகள் அணிந்திருந்த காவி சால்வையை பாதுகாப்பு அதிகாரிகள் அப்புறப்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச மாடல் அழகிப்போட்டியில் பங்கேற்கும் 34 பேர், தாஜ்மஹாலுக்கு வந்தனர். அவர்களில் சிலர் வெயிலுக்காக ஜெய் ஸ்ரீராம் மந்திரம் மற்றும் இந்து மத சின்னங்கள் அடங்கிய காவி சால்வையை அணிந்திருந்தனர். அவர்கள் தாஜ்மஹாலுக்குள் நுழையும்போது, தடுத்து நிறுத்திய பாதுகாப்பு அதிகாரிகள், சால்வையை பெற்றுக் கொண்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்த இந்து அமைப்பினர், ஆக்ராவில் மறியலில் ஈடுபட்டனர். ஆனால், விதிகளின்படியே தாங்கள் நடந்துகொண்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன