காவிரி மேற்பார்வைக் குழுவின் 8வது கூட்டம்

டெல்லியில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் காவிர் மேற்பார்வைக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. பருவ மழை பொய்த்து போனதாலும், காவிரியில் முறையாக தண்ணீர் திறக்கப்படாததாலும் தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டு, விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், காவிரி மேற்பார்வைக் குழுவினரின் 8வது மாதந்திர கூட்டம், மத்திய நீர்வளத்துறை செயலாளர் அமர்ஜித் சிங் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய அரசு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் பங்கேற்றுள்ளார். தமிழகத்தின் நீர்த்தேவையை சிறிய அளவிலாவது பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது கூட்டத்தின் முடிவில் தெரியவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன