காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 150 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று விநாடிக்கு 7 ஆயிரத்து 249 கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்த நிலையில், இன்று நீர்வரத்து 8 ஆயிரத்து 150 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 41.04 அடியாகவும், அணையில் நீர் இருப்பு 12.63 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன