காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் இருவர் பலி

கரூரில் காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த முரளிதரன் மற்றும் சின்னாண்டான் கோவிலைச் சேர்ந்த ராம்குமார், ஆகிய இருவரும் இருவேறு தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். விடுமுறை என்பதால் இருவரும் தங்கள் நண்பர்களுடன் நெரூர் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர். குளித்துக் கொண்டிருந்த போது இருவரும் ஆழமான பகுதியில் சிக்கி மூழ்கியுள்ளனர்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் கூச்சலிடவே அங்கு வந்த சிலர், மூழ்கிய இருவரையும் மீட்டனர். ஆனால் நீரில் மூழ்கி வெகு நேரம் ஆகி விட்டதால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களது உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன