காவிரிப் பிரச்சனையில் சத்யராஜ் கன்னடர்களுக்கு எதிராக பேசவில்லை – அன்புமணி

காவிரிப்பிரச்சனைக்குக் குரல் கொடுத்த நடிகர் சத்யராஜ்-க்கு எதிராக கன்னட அமைப்புக்கள் பாகுபலி 2 படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது கண்டனத்திற்குரியது, என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,காவிரிப் பிரச்சனையில் சத்யராஜ் கன்னடர்களுக்கு எதிராக பேசவில்லை எனவும், தமிழ்திரையுலகில் பணியாற்றும் கன்னட நடிகர்கள் சிலரும் ஆவேசமாக பேசிய நிலையில், அவர்களை தமிழர்கள் எதிர்த்தால் நிலைமை என்னவாகும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தம் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, தமிழகம் சார்ந்த நியாயமான பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கப் போவதாகவும் சத்யராஜ் துணிச்சலோடு அறிவித்ததற்குப் பாராட்டுககள் எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனேவே கன்னட அமைப்புகளின் போராட்டத்தால் தமிழர்கள், தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டதை நினைவு கூர்ந்த அவர், இம்முறை அதே போல் அம்மாநில அரசு போராட்டத்தை வளரவிட்டு வேடிக்கை பார்க்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன