Advertisement
Advertisement

கால்பந்து போட்டியில் நாய் செய்த குறும்புத்தனம்

அர்ஜெண்டினாவில் கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்த போது, மைதானத்திற்குள் நுழைந்த நாய் ஒன்று குறும்புத் தனத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. அர்செனால், (arsenal) சான் லோரென்ஸோ (san lorenzo) அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்த போது கால்பந்தின் மீது ஈர்ப்பு கொண்ட ஒருநாய் மைதானத்திற்குள் நுழைந்து கால்பந்தை கடித்து விளையாடியது. வீரர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அந்த குறும்பு நாயை பிடிக்க முடியவில்லை.

பின்னர் அந்த நாய் உரிமையாளரால் பிடித்துச் செல்லப்பட்டது. நாயின் குறும்புத் தன காட்சிகள் பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன