காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தான்தோன்றிமலை அடுத்த வாஞ்சிநாதன் தெருவில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் கரூர்- திண்டுக்கல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அங்கு சென்ற போலிசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து அனைவரும் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன