காரில் கடத்தி வந்த 126 மதுபாட்டில்கள் பறிமுதல்

ராமேஸ்வரத்தில் விற்பனை செய்வதற்காக காரில் கடத்தி வரப்பட்ட 126 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராமேசுவரத்தில் விற்பனை செய்வதற்காக, காரில் மதுபாட்டில் கடத்தி வருவதாக குற்ற நுண்ணறிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 126 மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்த அவர்கள், ரவி என்பவரை கைது செய்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன