காரிலும் பைக்கிலும் செல்பவர்கள் என்ன பட்டினியா கிடக்கிறார்கள் – கே.ஜெ.அல்போன்ஸ்

கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் காரிலும் பைக்கிலும் செல்பவர்கள் பட்டினியா கிடக்கிறார்கள் என்று மத்திய பெட்ரோலிய இணை அமைச்சர் கே.ஜெ.அல்போன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சரின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. திருவனந்தபுரத்தில் செய்தியாளர்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு பற்றி கேட்ட போது அல்போன்ஸ் கூறிய பதில் பலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. வசதி இருப்பவர்களிடம் தான் வரி வசூலிக்க முடியும் என்று கூறிய அல்போன்ஸ் காரும் பைக்கும் வைத்திருப்பவர்கள் நிச்சயமாக பட்டினி கிடக்கவில்லை என்று கூறினார்.இந்தியா குறித்து பிரதமர் மோடி பெங்கனவுகள் வைத்திருப்பதாகவும் அந்தக் கனவு நனவாக நிதி தேவை என்றும் அதை வசதியானவர்களிடம் இருந்துதான் பெற முடியும் என்றும் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!