காயத்தால் மைதானத்தில் தடுமாறி விழுந்தார் உசேன் போல்ட் – தோல்வியில் முடிந்த வெற்றிப் பயணம்

சாதனை வீரர் உசேன் போல்ட் தனது கடைசிப் போட்டியில் காயம் ஏற்பட்டதால் ஓட முடியாமல் மைதானத்திலேயே விழுந்தார். உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் 4X100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உசேன் போல்ட் பங்கேற்றார்.

இதுதான் அவர் பங்கேற்கும் கடைசி தடகளப் போட்டி என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். இந்நிலையில், போட்டியின்போது 4வது நபராக ஓடிய போல்ட், கடைசி நேரத்தில் வேகமாக ஓட முயற்சித்தபோது திடீரென இடது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால் வலி தாங்க முடியாமல் மைதானத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார். ஒலிம்பிக் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் சாம்பியன் பட்டங்களை வென்று அசத்திய போல்ட், விடைபெறும் நேரத்தில் தடுமாறி விழுந்தது அங்கு கூடியிருந்த ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன