போத்தீஸ் நிறுவனம் வாங்கிய நிலம் தொடர்பான பிரச்சினை -தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை

போத்தீஸ் நிறுவனம் வாங்கிய நிலம் தொடர்பான பிரச்சினையில், மேல்முறையீட்டு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

போத்தீஸ் நிறுவனம் காஞ்சிபுரத்தில் 13 ஆயிரம் சதுர அடி நிலத்தை 5 கோடியே 30 லட்சம் ரூபாய்க்கு தனலட்சுமி ஸ்ரீதர் என்பவரிடம் வாங்கியுள்ளது. ஆனால், அவரது தந்தை ஸ்ரீதர் தனபால் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், போத்தீஸ் நிறுவனம் வாங்கிய நிலத்தை சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் கொண்டு வந்தனர்.

இதனை எதிர்த்து டெல்லியில் உள்ள மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் போத்தீஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம், நிலத்தின் சந்தை மதிப்பில் 50 சதவீதத்தை அமலாக்கத்துறையின் வங்கி கணக்கில் டிபாசிட் செய்துவிட்டு, அந்த நிலத்தை போத்தீஸ் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளலாம் என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

57 total views, 1 views today

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன