Advertisement

காங்கிரஸ் தலைவராக விரைவில் ராகுல் காந்தி பொறுப்பேற்பார் – சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை விரைவில் ராகுல் காந்தி ஏற்பார் என சோனியா காந்தி தெரிவித்திருக்கிறார்.

தலைநகர் டெல்லியில், குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் சுயசரித நூல் வெளியிட்டு விழாவிற்கு பின், NDTVக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த சோனியா காந்தி, இந்த கேள்வியை பல ஆண்டுகளாக செய்தியாளர்கள் கேட்பதாகவும், இப்போது, விரைவில் அது நடக்கப் போவதாகவும், சோனியா காந்தி தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். 2004ஆம் ஆண்டு நேரடி அரசியலுக்கு வந்த ராகுல் காந்தி, 2007ஆம் ஆண்டு கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பையும் அவர் வகித்தார். 2013ஆம் ஆண்டு ராகுலுக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன