Advertisement

காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி? : நாளை காங். காரியக் கமிட்டிக் கூட்டத்தில் முக்கிய முடிவு

நாளை நடைபெறவுள்ள காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவது குறித்து முடிவெடுக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.

முதுமை மற்றும் உடல் நலம் காரணமாக கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்திக்கு அவர் வழங்குவார் என்று கடந்த சில மாதங்களாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால், தற்போது ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுவது பொருத்தமாக இருக்கும் என்று மூத்த நிர்வாகிகள் கருதுவதாக கூறப்படுகிறது.

எனவே நாளை காலை 10.30 மணி அளவில் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் காரியக் கமிட்டி கூட்டத்தில் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்திக்கு வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன