காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை, அங்கீகரித்த சுஷ்மா ஸ்வராஜுக்கு நன்றி – ராகுல் காந்தி

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை, அங்கீகரித்த சுஷ்மா ஸ்வராஜுக்கு நன்றி தெரிவிப்பதாக, ராகுல் காந்தி கூறியுள்ளார். ஐ.நா. பொதுக் கூட்டத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இந்தியா சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற கல்வி நிறுவனங்களை உருவாக்கியதாகவும், பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களை மட்டுமே உற்பத்தி செய்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சியில் செய்த சாதனைகளையும், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற நிறுவனங்களை அமைத்ததற்கான செயல்களையும் சுஷ்மா ஸ்வராஜ் அங்கீகரித்துள்ளதாகவும், அதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன