காகித ஆலை அதிபர் கடத்தல் வழக்கில் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை

சென்னை ஆர்.கே.நகரில் பணத்திற்காக தொழில் அதிபரை கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆர்.கே நகரை சேர்ந்த பக்கீர் முகமது என்ற காகித தொழிற்சாலை அதிபர் புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு மசூதிக்கு தொழுகைக்கு சென்றபோது, மர்ம கும்பலால் கடத்தப்பட்டார்.

அவரை விடுவிக்க அவரிடமே 80 லட்சம் ரூபாய் கேட்டு முடிவில் 3 லட்சம் ரூபாய் பறித்துக்கொண்டு அவரை விடுவித்துள்ளது கடத்தல் கும்பல். இதுதொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடத்திய ஆர்.கே.நகர் போலீசார், வேலூரை சேர்ந்த பாலு, சத்யா ஆகியோரை கைது செய்தனர்.

இருவரும் சர்வதேச போலீசாரால் தேடப்படும் காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதர் தனபாலின் கூலிப்படையினர் என்பதையும் போலீசார் கண்டறிந்தனர். இந்த நிலையில், டாடா மேஜிக் ஆட்டோ மூலம் பக்கீர் முகமதுவை கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *