கழிவு நீர் தொட்டி கட்டும் போது மண் சரிந்ததில் கட்டிட தொழிலாளி பலி

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கழிவு நீர் தொட்டி கட்டும் போது மண் சரிந்ததில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். வயலப்பாடி கிராமத்தில் பூபதி என்பவருக்கு சொந்தமான வீட்டிற்கு கழிவுநீர் தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக அவரின் வீட்டின் முன்பு சுமார் 10 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி அதிலிருந்த எடுக்கப்பட்ட மண்ணை பள்ளத்தில் மேல் புறத்தில் கொட்டி வைத்தனர்.

பள்ளத்தில் கட்டுமான பணி தொடங்கியபோது, மேல் பகுதியில் கொட்டப்பட்ட மண் திடீரென பள்ளத்தில் சரிந்தது. இதில், மண்ணுக்குள் புதைந்த கொளஞ்சி என்பவர் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மற்றொரு தொழிலாளி திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!