கலிஃபோர்னியா வனத்தீயில் சிக்கி 31 பேர் உடல் கருகி பலி

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் காட்டுத் தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது. வேகமான காற்றால் மின் கம்பிகளில் காய்ந்த மரங்களின் கிளை உரசியபோது காட்டுத் தீ ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இரு தினங்களுக்கும் மேலாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். சாலையின் இருபுறமும் பற்றி எரியும் காட்டுத் தீக்கு மத்தியில் உயிரைக் கையில் பிடித்தபடி பலர் காரில் தப்பித்து வெளியேறினர்.

இருப்பினும் காட்டுத் தீயில் சிக்கி 31 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மூவாயிரத்து 500 கட்டடங்களும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியும் தீயில் கருகி நாசமானது. நூற்றுக்கணக்கானோரை காணாததால், அவர்களின் கதி என்ன என அறியாது உறவினர்கள் தவித்து வருகின்றனர். தீ பரவும் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன