கலாம் நினைவிடத்தில் மீண்டும் திருக்குரான், பைபிள் வைப்பு

அப்துல் கலாம் மணிமண்டபத்தில், நேற்று அவரது சிலை அருகில் இருந்து அகற்றப்பட்ட திருக்குரான், பைபிள் ஆகியவை மீண்டும் அங்கு கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் பேக்கரும்பில் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தில், வீணை வாசிப்பது போன்ற கலாம் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு அருகே பகவத் கீதை நூலும் இடம்பெற்றது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து, நேற்று காலையில் அப்துல் கலாமின் அண்ணன் பேரன் சலீம், பகவத் கீதைக்கு அருகே திருக்குரான் மற்றும் பைபிள் ஆகியவற்றையும் வைத்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பவே, இந்த புனித நூல்கள், கலாம் சிலையின் பின்புறத்தில் உள்ள கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டு, மாலையில் அந்த நூல்கள் கண்ணாடி பேழையில் இருந்தும் அகற்றப்பட்டன.

இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று காலை திருக்குரான் மற்றும் பைபிள் ஆகியவற்றை கலாம் சிலைக்கு பின்புறம் உள்ள கண்ணாடிப் பேழையில் பாதுகாப்பு அதிகாரிகள் வைத்துள்ளனர். இதனிடையே, அப்துல் கலாம் மணிமண்டபத்தினுள் செல்போன் மற்றும் கேமராக்களை கொண்டு செல்லவும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன