Advertisement

கலாம் சிலை அருகே வைக்கப்பட்ட குரானும் பைபிளும் அகற்றப்பட்டன

அப்துல் கலாம் நினைவிடத்தில், அவரது சிலையருகே வைக்கப்பட்ட குரான் மற்றும் பைபிள் புத்தகங்கள், எதிர்ப்பை அடுத்து அங்கிருந்து அகற்றப்பட்டது.

ராமேஸ்வரம் பேக்கரும்பில் மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட அப்துல் கலாம் நினைவிடத்தில், அப்துல்கலாம் வீணை மீட்டுவது போன்ற சிலையும், அதனருகே பகவத் கீதை புத்தகமும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், கலாம் சிலைக்கு அருகே பகவத் கீதை வைக்கப்பட்டது குறித்து விமர்சனம் எழவே, கலாமின் பேரன் சலீம் கலாம் சிலையருகே குரான் மற்றும் பைபிள் ஆகியவற்றை வைத்தார்.

இதற்கு, இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், குரானும் பைபிளும் சிலையின் அருகில் இருந்து அகற்றப்பட்டு, அவை ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன