கர்நாடக டிஐஜி ரூபாவுக்கு குடியரசுத் தலைவர் விருது

கர்நாடக மாநில டிஐஜி ரூபாவுக்கு குடியரசுத்தலைவர் விருது வழங்கப்பட்டது. காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக ரூபாவுக்கு கர்நாடக மாநில ஆளுனர் இந்த விருதை வழங்கினார். பெங்களூரில் ஆளுனர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு சலுகைகள் அளிப்பதற்காக சிறைத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டியிருந்த டிஐஜி ரூபா, சிறையில் நடந்த விதிமீறல்களை அம்பலப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன