கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பேட்டி அளிக்க தடை கோரி மனு

கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா, ஊடகங்களுக்குப் பேட்டியளிப்பதற்குத் தடை விதிக்கக்கோரி, அதிமுக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி அம்மாநில முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

புகழேந்தியின் சார்பில் அவரது வழக்கறிஞர் அனுப்பிய புகார் மற்றும் கோரிக்கை மனுவில், சிறைத்துறை டிஐஜி யாக இருந்த ரூபா, விதிகளை மீறி ஊடகங்களுக்குப் பேட்டியளித்து காவல்துறைக்கும், கர்நாடக அரசுக்கும் களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளார்.

இதனால், துறை மாற்றுதலுக்கு ஆளான பின்பும், பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவைக் குறிவைத்து, ரூபா தமிழ் ஊடகங்களுக்குத் தொடர்ந்து பேட்டியளிப்பதாகக் கூறியுள்ளார்.

ஊடக வெளிச்சத்துக்காகவே ரூபா இவ்வாறு செய்ததாகக் கூறியுள்ள புகழேந்தி, மேலும் அவர் ஊடகங்களுக்குப் பேட்டியளிப்பதைத் தடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன