கர்நாடக அரசு மீது அமித்ஷா அடுக்கடுக்கான ஊழல் புகார்கள்

காங்கிரசை ஆட்சிப் பீடத்தில் இருந்து அகற்றி காங்கிரஸ் அல்லாத கர்நாடகாவை உருவாக்குமாறு பாஜக தலைவர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரில் பாஜக நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர் கர்நாடக காங்கிரஸ் அரசு மீது அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்தார். கர்நாடக அரசு ஊழலில் திளைப்பதாக அவர் சாடினார் .தமது மூன்றுநாள் கர்நாடக பயணத்தின் போது கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேசி வரும் அமித் ஷா எம்பியாக தேர்வு செய்யப்பட்ட பின்னர் பெங்களூர் வந்துள்ளார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர். எடியூரப்பா தலைமையில் கர்நாடகாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையும் என்று அமீத்ஷா அப்போது தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன