கரூர் – பி.பி. நிதிநிறுவன பங்குதாரர்களின் வீட்டில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

கரூர் பி.பி நிதிநிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரி ஏய்ப்பு புகாரையடுத்து கரூரில் உள்ள பி.பி. நிதிநிறுவனத்தில் கடந்த 2 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் அந்த நிதிநிறுவனம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாகவும், இதுதொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் பி.பி.நிதிநிறுவனத்தின் மேலாளர் பழனிச்சாமியின் வீடு, அலுவலகம், 20 பங்குதாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று மூன்றாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன