கரூர் நிதி நிறுவனத்தில் மூன்றாவது நாளாக நீடித்த சோதனை

கரூரில் நிதிநிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

அரவக்குறிச்சியைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரைப் பங்குதாரராகக் கொண்டு பி.பி. பைனான்ஸ் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 15க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் மூன்று நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், வரி ஏய்ப்பு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை 5 பெட்டிகளில் கட்டி சீல்வைத்து கோவை வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன