கரூரில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை

கரூரில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கரூர் நகரில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில், திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாது பெய்த பலத்த மழை காரணமாக, மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன