கருவேல மரங்கள் அகற்றுவது குறித்து விழிப்புணர்வு பேரணி

வேலூர் மாவட்டம் காட்பாடியில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நீர் ஆதாரத்தை அழித்து வறட்சியை ஏற்படுத்தும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே காட்பாடியில் கருவேல மரங்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கருவேல மரங்களை அகற்றும் பணிகளும் நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன