கமல்ஹாசனுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் நோட்டீஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனிடம் 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை காயத்ரி ரகுராம், ’சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதால், பல்வேறு தரப்பிலும் அவருக்கு கண்டனம் எழுந்தது.

இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய காயத்ரி ரகுராமின் பேச்சை நீக்காமல் ஒளிபரப்பிய விஜய் தொலைக்காட்சி, நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோரிடம் 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். ஒருவாரத்தில் மன்னிப்புக் கேட்காவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன